மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை...!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்மு டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Update: 2022-07-25 03:14 GMT

டெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெறுகிறார்.

இதற்கிடையில், புதிய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்கிறார். டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழா இன்று காலை 10.15 மணிக்கு நடைபெறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக காலை 9.25 மணியளவில் திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு வருகிறார். அங்கு திரவுபதி முர்முவுக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அங்கிருந்து 10.03 மணியளவில் ராம்நாத் கோவிந்துடன் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு புறப்படுகின்றனர்.

இந்நிலையில், புதிய ஜனாதிபதியாக பதவியேற்புக்கு முன்னதாக டெல்லி ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு தற்போது மரியாதை செலுத்தினார். காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்