ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கண்புரை அறுவை சிகிச்சை
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
புதுடெல்லி,
ராணுவ மருத்துவமனையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு இன்று வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றார். அவருக்கு வயது 64. கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி ஜனாதிபதி முர்மு ராணுவ மருத்துவமனையில் இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய ஜனாதிபதி, திரவுபதி முர்மு இன்று காலை புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.