மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா பொறுப்பேற்றார்..!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2023-05-29 08:24 GMT

புதுடெல்லி,

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும். தகவல் உரிமைச் சட்டத்தைக் காக்கும் மத்திய தகவல் ஆணையத்தைப் போலவே, இவ்விரு அமைப்புகளும் நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபாதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரவீண் குமார் ஸ்ரீவத்சவாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த டிசம்பர் மாதம் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சுரேஷ் என். பட்டேலின் பதவிக் காலம் நிறைவுபெற்றது முதல், பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா, பொறுப்பு ஆணையராக பதவிவகித்து வந்த நிலையில், இன்று ஆணையராக பதவியேற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்