வீடு கேட்டு பிரதமர் மோடி சிக்கமகளூரு கிராம மக்கள் கடிதம்

சிக்கமகளூருவில் வீடு கேட்டு பிரதமர் மோடி சிக்கமகளூரு கிராம மக்கள் கடிதம் எழுதினர்.

Update: 2023-08-20 18:45 GMT

சிக்கமகளூரு :-

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவில் குள்ளாடி கிராமம் உள்ளது. இந்தகிராமத்தில் 70-க்கும் மேற்பட்டோர் அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் குள்ளாடி கிராமமக்கள் வீடு கட்டித்தரக்கோரி கலசா தாசில்தார், மாவட்ட கலெக்டர் உள்பட அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து பல போராட்டங்களை குள்ளாடி கிராமமக்கள் நடத்தினர். இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு குள்ளாடி கிராமமக்கள் வீீடு கட்டித்தரக்கோரி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், குள்ளாடி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடிசை அமைத்து நாங்கள் வசித்து வருகிறோம்.

ஆனால் எங்களுக்கு இதுவரை அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பலனில்லை. எனவே குள்ளாடி கிராம மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து குள்ளாடி கிராமத்திற்கு செல்ேபான் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அதில் குள்ளாடி கிராமமக்களுக்கு வீடு கட்டி கொடுப்பது சம்பந்தமாக பிரதமர் மோடி 3 நாட்களுக்குள் பேசுவார் என தெரிவித்தனர். மேலும் குள்ளாடி கிராமத்திற்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்