காசா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

காசா மருத்துவமனை தாக்குதல் தொடர்பாக பாலஸ்தீன அதிபருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.;

Update:2023-10-19 19:41 IST

புதுடெல்லி,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள ஒரு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது காசா மருத்துவமனை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்