பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் குறித்து ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் வரும் 29 ஆம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு அறிவுரைகளை வழங்கலாம் என்று கூறப்படுகிறது. பிப். 1-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த ஆண்டு ஒன்பது மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுடன், அடுத்த ஆண்டு மக்களவைக்கான பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பில் வெளியாகலாம் எனத்தெரிகிறது.