பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்ய வேண்டும்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என சி.டி.ரவி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-09-26 06:00 GMT

சிக்கமகளூரு;

பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பொதுமக்களின் அமைதியை கெடுக்கும் வகையிலும், குழப்பத்தை உருவாக்கி பயங்கரவாத செயல்களிலும் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட பயிற்சியும் அளித்து வருகிறார்கள்.

இதனால் நாட்டில் பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை தடை செய்ய வேண்டும். நாட்டில் பயங்கரவாதம் வளரக்கூடாது என அரசு முடிவு செய்தால் அந்த அமைப்புகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்