காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட நபரை காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக நியமனம் செய்து உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-19 17:04 GMT

லக்னோ,

காசி மற்றும் தமிழகத்துக்கு இடையே தொன்மையாக நிலவும் உறவு மற்றும் அதன் கலாச்சார பெருமைகளை மீட்டெடுக்கும் வகையில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17-ந்தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணாக்கானோர் தமிழகத்தில் இருந்து காசிக்குச் சென்றுள்ளனர்.

இந்த சூழலில் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கே.வெங்கட் ரமணா கணபதி என்பவரை காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக நியமனம் செய்து உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் காசி விஸ்வநாதர் கோயில் அறங்காவலர் குழுவில் உறுப்பினராவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்