60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் - கேரள அரசு அறிவுறுத்தல்
கேரளாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்புப் பிரிவு தொடங்கப்பட்டதுடன், கூட்ட நெரிசலான பகுதிகளில் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.