சிக்கமகளூருவில் அரசு பள்ளி ஆசிரியரை மாற்றும்படி பெற்றோர் போராட்டம்

சிக்கமகளூருவில் பணியில் அலட்சியமாக செயல்படும் அரசு பள்ளி ஆசிரியரை மாற்றும்படி பெற்றோர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-06-10 18:45 GMT

சிக்கமகளூரு, ஜூன்.11-

9 மாணவர்கள் கொண்ட பள்ளி

சிக்கமகளூரு மாவட்டம் (தாலுகா) பிதரே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் திம்மாப்புரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 9 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மாணவர்கள் அனை

வருக்கும் ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வருகிறார். வேறு ஆசிரியர்கள் கிடையாது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஆசிரியரும் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. காலை 8.30 மணிக்கு வரவேண்டிய ஆசிரியர், 11 மணிக்கு வருவதாகவும், மாலையில் 3 மணிக்கே வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் மாணவர்களால் சரியாக படிக்க முடியவில்லை.

பெற்றோர் போராட்டம்

இந்த பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாணவர்கள் செல்லவேண்டும் என்றால் வாய்ப்பு வசதிகள் இல்லை. இதனால் இந்த பள்ளியையே நம்பி இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியரின் செயல்பாடு மாணவர்களை மட்டுமில்லை. பெற்றோரையும் அதிருப்தியடைய செய்துள்ளது.

எனவே அவர்கள் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த 10 நாட்களாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர். அலட்சியமாக செயல்படும் ஆசிரியரை மாற்றிவிட்டு வேறு ஆசிரியரை நியமிக்கவேண்டும். மேலும் கூடுதலாக ஒரு ஆசிரியரையும் நியமிக்கப்படவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கலெக்டரிடம் புகார்

இது குறித்து மாவட்ட கலெக்டர் ரமேஷிடமும் பொதுமக்கள் முறையிட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுத்த பின்னர்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்