பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதன்முறை: மகளை முதல் பெண்மணியாக அறிவித்த அதிபர்

ஆசிபா அலியை நாட்டின் முதல் பெண்மணியாக அதிபர் ஆசிப் அலி சர்தாரி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2024-03-11 23:11 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார். பின்னர் நாட்டின் 14-வது அதிபராக ஆசிப் அலி பதவியேற்றார்.

இந்தநிலையில் தன்னுடைய இளைய மகளான ஆசிபா அலியை நாட்டின் முதல் பெண்மணியாக அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான அலி, அவரின் இறப்புக்கு பின்னர் மறுமணம் செய்து கொள்ளவில்லை.

இதனால் தன்னுடன் களப்பணி ஆற்றி வரும் ஆசிபா அலிக்கு(வயது 31) நாட்டின் முதல் பெண்மணிக்கு அந்ததஸ்து வழங்குவார் என அவருடைய மூத்த மகள் பக்தவார் பூட்டோ அலி தெரிவித்துள்ளார். அவ்வாறு நாட்டின் முதல் பெண்மணியாக ஆசிபா அலி அறிவிக்கப்பட்டால் பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இது முதன்முறையாக அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்