பஞ்சாப் மாநிலத்தில் பாக். உளவுப்படை ஆதரவு பயங்கரவாத கும்பல் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாத கும்பல் பிடிபட்டது.

Update: 2022-08-14 20:17 GMT

சண்டிகார்,

சுதந்திர தினம் நெருங்கிய நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. ஆதரவு பயங்கரவாத கும்பல் பிடிபட்டது. பஞ்சாப் போலீசாரும், டெல்லி போலீசாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அந்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கனடாவை சேர்ந்த அர்ஷ் டல்லா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த குர்ஜந்த் சிங் ஆகியோரின் கூட்டாளிகள் ஆவர். அவர்களிடம் இருந்து 3 கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்மூலம், அவர்களின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்