கர்நாடகாவில் உலக சாதனை முயற்சியாக 9 கி.மீ நீள தேசியக் கொடியை ஏந்தி 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி!
கர்நாடகாவில் 9 கி.மீ நீளம் மற்றும் 9 அடி அகலம் கொண்ட மூவர்ணக் கொடியை சுமந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவின் ஹுபாலியின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தாலுகாவில் 9 கிலோமீட்டர் நீளம் மற்றும் 9 அடி அகலம் கொண்ட மூவர்ணக் கொடியை 50,000க்கும் மேற்பட்டோர் சுமந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் உலக சாதனை படைக்கும் முயற்சி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான முயற்சிக்கு முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்தோஷ் லாட் தலைமை தாங்குகிறார். கலகத்கி - அல்நாவர் தாலுகாவை சேர்ந்த இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த சாதனை முயற்சியில் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சந்தோஷ் லாட் அறக்கட்டளையின் சார்பில், 8,000 பேர் கொண்ட பேரணியில் 2 கிமீ நீளம், 9 அடி அகலம் கொண்ட மூவர்ணக் கொடி சுமந்து செல்லப்பட்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.