டெல்லியில் 2,625 கிலோ பட்டாசுகள் பறிமுதல்: 2 பேர் கைது

டெல்லியில் 2,625 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-10 20:23 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்கால மாசு பரவலை கருத்தில் கொண்டு, வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை பட்டாசுகளை உற்பத்தி செய்வது, இருப்பு வைப்பது, வினியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. இதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் டெல்லி மண்டோலி தொழில்பேட்டை பகுதியில் லாரியில் இருந்து குடோனுக்கு பட்டாசு இறக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குடோனுக்கு பட்டாசு இறக்குவது தெரியவந்தது. போலீசார் உடனே அதனை தடுத்து நிறுத்தி, பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். 145 அட்டைப்பெட்டிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 625 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக முகுல்ஜெயின் (வயது 24), அவருடைய உறவினர் தூஷார் ஜெயின் (19) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் அரியானா மற்றும் பஞ்சாபில் பட்டாசு வாங்கியதாகவும், அவை தமிழகத்தின் சிவகாசியில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்