தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவு

தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

Update: 2024-05-21 11:16 GMT

புதுடெல்லி,

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று கூடியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதத்திற்கான 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.கடந்த 16ம் தேதி வினீத் குப்தா தலைமையில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் 2.5 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்