மாநிலங்களவையில் அமளி - ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-07-24 07:49 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இதனால் இரு அவைகளும் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி 12 மணிக்கு அவைக்கூட்டம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் அதே முழக்கங்களை அதாவது, பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்கவேண்டும் என குரல் எழுப்பினர். இதனால் மீண்டும் இன்று இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அமளியில் ஈடுப்பட்டார். மாநிலங்களவை தலைவர் இருக்கை வரை சென்று அமளியில் ஈடுபட்டதால் அவரை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்