போதை பொருள் கடத்தலை தடுக்க டெல்லி போலீஸ் அதிரடி- 100 இடங்களில் சோதனை

தலைநகர் டெல்லியில் போதை பொருள் கடத்தலை தடுக்க "ஆபரேஷன் கவச்" எனும் அதிரடி தேடுதல் வேட்டையை டெல்லி போலீசார் தொடங்கி உள்ளனர்.

Update: 2023-06-20 07:34 GMT

டெல்லி,

டெல்லியில் நாளுக்கு நாள் போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் உட்பட பல இளைஞர்கள், பெண்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் நகரின் பல பகுதிகளில் குற்ற சம்பவங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றன. போதை பொருள் புழக்கத்தை தடுக்க கோரியும், சிறுவர்களுக்கு போதை பொருள் கிடைக்காமல் செய்வதை உறுதி செய்யவும் போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இளைஞர்களையும் குழந்தைகளையும் போதைப் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற மாநகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அதற்கு "ஆபரேஷன் கவச்" எனவும் பெயரிட்டனர். கடந்த மே 12,13 தேதிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் 43 போதை பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று (திங்கள்) இரவு போலீசார் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் 100 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் போதை பொருள் பதுக்கி வைத்திருந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்