அக்.17ல் சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.;

Update:2022-10-11 15:54 IST

சபரிமலை,

தமிழ் மாதத்தின் ஐப்பசி, மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. நடை திறக்கப்பட்ட பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பூஜைகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் பக்தர்கள் மகர, மண்டல பூஜைக்கு சபரிமலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்