அதிகாரிகள் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை
அதிகாரிகள் தொல்லையால் அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: பெங்களூரு ராஜராஜேசுவரிநகரில் உள்ள அரசு பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் பசப்பா. இவர், பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பணிமனைக்கு பசப்பா சென்றார். பின்னர் பணிமனை அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு பசப்பா தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் ராஜராஜேசுவரிநகர் போலீசார் விரைந்து சென்று பசப்பா உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
உயர் அதிகாரிகள் தொல்லை காரணமாக பசப்பா தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜராஜேசுவரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.