ஒடிசா ரெயில் விபத்து - நாளை காரக்பூரில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக நாளை காரக்பூரில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணையை தொடங்க உள்ளார்.

Update: 2023-06-04 11:59 GMT

புவனேஷ்வர்,

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக நாளை காரக்பூரில் ரெயில்வே தென் கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உள்ளார். நாளை காரக்பூரில் தொடங்கும் விசாரணை இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஒடிசாவில் பாலசோர் அருகே 12841 ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் & 12864 SMVT பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தடம் புரண்டது தொடர்பாக காரக்பூரில் உள்ள சவுத் இன்ஸ்டிடியூட்டில் ஜூன் 5 மற்றும் 6 தேதிகளில் தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சட்டப்பூர்வ விசாரணையை நடத்துவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்