முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - டெல்லி அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் எதிரொலியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கொரோனா பராமரிப்பு மையங்களும் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதேநேரம் திருவிழா காலங்களில் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் சேவைகள் ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.