ரெயில்வே தேர்வுகளில் முறைகேடு நடைபெறவில்லை - அஸ்வினி வைஷ்ணவ்

ரெயில்வே தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடு எதுவும் நிகழவில்லை என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.;

Update:2024-07-25 02:27 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஹஜ் பயணிகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர், "ஜூலை 21, 2024 நிலவரப்படி, 2024 ஹஜ் யாத்திரையின் போது 201 இந்தியர்கள் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் ஆவர்" என கூறியுள்ளார்.

அதேபோல் மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் "ரெயில்வே சவால்கள் அனைத்தையும் சமாளித்து, அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சேர்ப்பை வெற்றிகரமாக நடத்தியது. முழு செயல்முறையிலும் வினாத்தாள் கசிவு அல்லது அதுபோன்ற முறைகேடு எதுவும் நிகழவில்லை" என கூறினார்.

மாநிலங்களைவில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர், "மத்திய ஆயுதப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களில் 10 சதவீதத்தை முன்னாள் அக்னிவீரர்களுக்கு ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்