என்.ஐ.ஏ சோதனை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கேரளாவில் போராட்டம்
என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.;
திருவனந்தபுரம்,
பயங்கரவாத தொடர்பு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினர் நாடு முழுவதும் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, நாடு முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி கேரளாவில் பல இடங்களில் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன.