மராட்டியத்தில் 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை...!

கர்நாடக மாநிலத்திலும் ஒரு இடத்தில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.;

Update:2023-12-09 09:17 IST

மும்பை, 

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதில் மராட்டிய மாநிலம் முழுவதும் சுமார் 40 இடங்களிலும் கர்நாடக மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தானே, புனே, மீரா பயந்தர் போன்ற நகரங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை பெரும்பாலும் தானே நகரத்தை சுற்றியே நடைபெறுகிறது.

சமீபத்தில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஆட்டோவில் எடுத்து சென்ற குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக பயங்கரவாதிகள் முகமது ஷாரிக், சையது யாசின், ரசீன், நதீம் பைக் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்