பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கு: பா.ஜ.க. நிர்வாகியிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பா.ஜ.க நிர்வாகியிடம் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Update: 2024-04-05 11:40 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த குண்டுவெடிப்பில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ள என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஷிவமோகா, பெல்லாரி சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிவமோகா பகுதியில் இருந்து இரண்டு பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்திருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது பா.ஜ.க. நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இன்று சாய் பிரசாத்திடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு தப்பிச்சென்ற நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்