திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

கேரளாவைச் சேர்ந்த ரேஷ்மாவுக்கும், அக்ஷய் ராஜ்-க்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

Update: 2023-08-27 07:23 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் முள்ளில்லாவன்முடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ரேஷ்மா (வயது 23). இவருக்கும் அருவிக்கரா பகுதியை சேர்ந்த அக்ஷய் ராஜ் என்பவருக்கும் கடந்த மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து ரேஷ்மா தன் கணவர் அக்ஷய் ராஜ் உடன் அருவிக்கராவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரேஷ்மா இன்று தன் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த சமயத்தில் ரேஷ்மாவின் கணவர் அக்ஷய் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

இது குறித்து அக்ஷய் ராஜ்-ன் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அறையில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் கணவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்