கர்நாடகத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 9,160 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 40 லட்சத்து 67 ஆயிரத்து 390 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு உயிரிழப்புகள் இல்லை. தொற்றில் இருந்து குணமடைந்து நேற்று மட்டும் 247 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள்.