தேசிய கொடியை அவமதித்தவர் கைது
தேசிய கொடியை அவமதித்தவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பல்லாரி டவுனில் கணேஷ் காலனி பகுதியை சேர்ந்த ரகு என்பவர் தனது வீட்டு முன்பு தேசிய கொடி ஏற்றினார். தேசிய கொடியில் அசோக சக்கரத்தின் மீது ஜீசஸ் என்ற ஆங்கில எழுத்தில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். இதை அறிந்த இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீசார் விரைந்து வந்து இந்து அமைப்பினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். மேலும் தேசிய கொடியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தேசிய கொடியை அவமதித்ததாக ரகுவை கைது செய்தனர்.