மாயமான அதிபர் கோத்தபய அதிரடி உத்தரவு இலங்கையில் மீண்டும் கியாஸ் வினியோகம்

இலங்கையில் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது.

Update: 2022-07-10 21:05 GMT

கொழும்பு,

இலங்கையில் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது. கடந்த சில மாதங்களாகவே மக்கள் கியாஸ் சிலிண்டர்களுக்காக போராடி வந்தனர். சாலை மறியலும் செய்தனர். இதில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் அங்கு நேற்று 3,740 டன் சமையல் கியாசுடன் கூடிய கப்பல் கெரவலப்பிட்டியா துறைமுகம் சென்று இறங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து சமையல் கியாஸ் வினியோகத்தை உடனடியாக தொடங்கி விட வேண்டும் என்று மாயமான அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதை அவரது அலுவலகம் தெரிவித்தது. இதனால் அங்கு கியாஸ் வினியோகம் எந்த நேரத்திலும் தொடங்கி விடும் என தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்