ஆண் குழந்தை மோகத்தால் 5 வயது மகளின் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி

ஆண் குழந்தை மோகத்தால் ௫ வயது மகளின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற தொழில் அதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-06-27 21:15 GMT

பெங்களூரு

பெங்களூரு எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ்வரராவ், ரியல்எஸ்டேட் அதிபர். இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். இதற்கிடையில், 2-வது முறையாக ராதிகா கர்ப்பம் அடைந்திருந்தார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதிகாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால் ஆண் குழந்தை மீது தான் வெங்கடேஷ்வர ராவுக்கு மோகம் இருந்தது. இதனால் 2-வதும் பெண் குழந்தை பெற்றெடுத்ததால் மனைவி ராதிகாவுடன், அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் நின்று விளையாடிய தனது 5 வயது மகளை வெங்கடேஷ்வர ராவ் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும், அந்த குழந்தையை ராதிகா காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷ்வர ராவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்