தலையில் கல்லைப்போட்டு சகோதரிகள் படுகொலை

பாகல்கோட்டை அருகே சொத்து பிரச்சினையில் தலையில் கல்லைப்போட்டு சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.;

Update:2023-03-14 03:21 IST

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை அருகே சொத்து பிரச்சினையில் தலையில் கல்லைப்போட்டு சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

சொத்து பிரச்சினை

பாகல்கோட்டை மாவட்டம் பனஹட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் யல்லவ்வா புஜங்கா(வயது 48). இவரது சகோதரி போரவ்வா புஜங்கா(45). இவருடைய உறவினர் காடப்பா. இந்த நிலையில, காடப்பாவுக்கும், யல்லவ்வா குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. அதுபோல், நேற்றும் 2 குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

அப்போது நடுரோட்டில் வைத்து யல்லவ்வா, போரவ்வாவை காடப்பா அடித்து, உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் ரோட்டில் நிலை தடுமாறி விழுந்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சாலையோரம் கிடந்த பெரிய கல்லை எடுத்து சகோதரிகள் யல்லவ்வா மற்றும் போரவ்வாவின் தலையில் காடப்பா போட்டதாக கூறப்படுகிறது.

சகோதரிகள் படுகொலை

இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் யல்லவ்வா மற்றும் போரவ்வா பலியானார்கள். இதை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கிருந்து காடப்பா தப்பித்து ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் பனஹட்டி போலீசார் விரைந்து வந்து சகோதரிகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சொத்து பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் சகோதரிகளை காடப்பா தீர்த்து கட்டியது தெரியவந்தது. இதுகுறித்து பனஹட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த காடப்பாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்