மும்பை ரெயில்வே போலீஸ் டுவிட்டர் பக்கம் முடக்கம்

மும்பை புறநகர் ரெயில் நிலையங்கள், பயணிகளை பாதுகாக்கும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2022-10-28 12:54 GMT

மும்பை,

மும்பை புறநகர் ரெயில் நிலையங்கள், பயணிகளை பாதுகாக்கும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பை ரெயில்வே போலீசாரின் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டது. இதுதொடர்பாக ரெயில்வே போலீஸ் கமிஷனர் குவாய்சர் காலித்வெளியிட்ட டுவிட்டர் பதிவில்:-

அன்புள்ள மும்பைவாசிகளே, மும்பை ரெயில்வே போலீசாரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது எங்களுக்கு தெரியவந்து உள்ளது. எனவே நாங்கள் கூறும்வரை, அதில் போடப்படும் புதிய பதிவுகளுக்கு நீங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்.

முடக்கப்பட்ட பக்கத்தை மீட்கும் பணியில் சம்மந்தப்பட்ட துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொது மக்கள் எனது டுவிட்டர் கணக்கில் அல்லது '1512' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்