பண மோசடி வழக்கு: லாலு பிரசாத் குடும்பத்தினர் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

பண மோசடி வழக்கில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் சில சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Update: 2023-08-01 03:54 GMT

புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் 'குரூப் டி' பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக தங்கள் நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் லாலு பிரசாத் குடும்பத்தினரின் சில சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த எண்ணிக்கை, அவற்றின் மதிப்பு பற்றிய விவரம் தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்