மெட்ரோ பயணிகள் செல்போன் மூலம் டிக்கெட் பெற வசதி

மெட்ரோ பயணிகள் செல்போன் மூலம் டிக்கெட் பெற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-08-23 20:06 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மெட்ரோ சேவை வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கிடையே பயணிகள் மெட்ரோ நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக செல்போன் மூலம் மெட்ரோ ரெயில்களுக்கு டிக்கெட் எடுக்கும் வசதியை கொண்டு வந்துள்ளனர்.

இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே செல்போன் செயலியை பயன்படுத்தி கட்டணத்தை கொடுத்து டிக்கெட் எடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்