முன்னும் பின்னும் இளம் பெண்கள் பைக்கில் வீர சாகசம்...!

முன்னும் பின்னும் பைக்கில் இளம் பெண்களை உட்காரவைத்துக் கொண்டு வாலிபர் செய்த பைக் சாகச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

Update: 2023-04-01 08:46 GMT

மும்பை

மராட்டியத்தில் முன்னும் பின்னும் பைக்கில் இளம் பெண்களை உட்காரவைத்துக் கொண்டு வாலிபர் செய்த பைக் சாகச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

லட்சகணக்கான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோ கிளிப், @PotholeWarriors என்ற டுவிட்டரரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த மும்பை போக்குவரத்து போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் போலீசார் மூவர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்) மற்றும் 336 (உயிர்களுக்கு ஆபத்து) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் "பிகேசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வீடியோவில் உள்ள நபர்கள் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும் என கூறி உள்ளனர். 



Tags:    

மேலும் செய்திகள்