தாயை தாக்கிய தந்தையை அடித்துக்கொன்ற மகன் - அதிர்ச்சி சம்பவம்

தாயை தாக்கிய தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-04-24 05:24 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அபிர்நாத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வரது 52). இவருக்கு மனைவி மற்றும் 19 வயதில் பிரகாஷ் என்ற மகன் உள்ளனர்.

இதனிடையே, ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவி வந்துள்ளது. இதன் காரணமாக ராஜேஷ் அவரது மனைவியை அவ்வப்போது தாக்கியுள்ளார். இதை மகன் பிரகாஷ் கண்டித்துள்ளார். ஆனாலும், மனைவியை ராஜேஷ் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் பிரகாஷ் கூர்மையான ஆயுதத்தால் தந்தை பிரகாஷை சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிரகாஷ் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ஹ்டு சென்று தந்தையை கொலை செய்த பிரகாஷை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்