மராட்டியம்: தலையில் காயங்களுடன் ஓடை அருகே இறந்து கிடந்த நபர்
அடையாளம் தெரியாத நபர்கள், அந்த நபரைக் கொன்று சடலத்தை ஓடையின் ஓரமாக வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலி நகரில் உள்ள சிறிய ஓடை அருகே 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த விஷ்ணு நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவரின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததாக காவல் அதிகாரி கூறினார்.
அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த நபரைக் கொன்று சடலத்தை ஓடையின் ஓரமாக வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் யார்? என்பது அடையாளம் காணப்படவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.