உ.பி: 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 23 வயது நபர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 23 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-11 03:21 GMT

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 23 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற 2 பேரை கைது செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கியான்பூர் வட்ட அதிகாரி புவனேஷ்வர் பாண்டே கூறுகையில், ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் கடத்தியுள்ளார்.

சிறுமி வலுக்கட்டாயமாக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வைத்து அந்த நபர், மற்றொரு நபர்களுடன் சேர்ந்து ஐந்து மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார்.

பின்னர் அந்த கொடூர கும்பலின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி, ஜூன் 27 அன்று சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை காவல்துறையிடம் விவரித்ததைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீது ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று பாண்டே கூறினார்.

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 23 வயதான நபர் கைது செய்யப்பட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்