கிறிஸ்துமஸ் விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்பு

கொல்கத்தாவில் உள்ள செயின்ட்பால் கதீட்ரல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார்.;

Update:2022-12-25 13:07 IST

கொல்கத்தா,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் உள்ள செயின்ட்பால் கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்றார். அங்கு பேராயரிடம் அவர் ஆசி பெற்றார். அவருடன் அவரது மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியும் சென்றிருந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்