'என்னை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள்'; கிராம மக்களிடம் மந்திரி ஸ்ரீராமுலு வேண்டுகோள்

‘என்னை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள்’ என கிராம மக்களிடம் மந்திரி ஸ்ரீராமுலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-08-20 15:10 GMT

சிக்கமகளூரு;


சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகா கோனாபுரா கிராமத்தில் அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் மொலகால்மூரு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான ஸ்ரீராமுலு கலந்துகொண்டு, பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கிராம மக்கள் முன்னிலையில் பேசுகையில், 'என்னை மீண்டும் ஒருமுறை இந்த தொகுதியில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த காலங்களில் நான் நல்ல வேலை செய்துள்ளேன்.

மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். ஏராளமான பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன். இதனால் மக்கள் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்