முதலீடு செய்தவர்களிடமிருந்து ரூ.1.8 கோடி மோசடி செய்த மராட்டிய பெண் கைது

அதிக லாபம் தருவதாக கூறி முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1.8 கோடி மோசடி செய்த மராட்டிய பெண் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2022-05-28 12:24 GMT

புனே,

முதலீட்டாளர்களிடம் ரூ.1.8 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புனேவைச் சேர்ந்த 53 வயது பெண்ணை மராட்டிய மாநிலம் தானே போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனேவை சேர்ந்த ஷ்ரத்தா மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த் பாண்டுரங் பலாண்டே ஆகிய இருவரும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அந்நிய செலாவணி வர்த்தகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபகரமான வருமானம் தருவதாக உறுதியளித்து முதலீட்டாளர்களை கவர்ந்தனர்.

இவர்கள் கூறியதை நம்பி 29 பேர் அவர்களிடம் ரூ. 1.82 கோடியை கொடுத்துள்ளனர். இருவரும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, வட்டி தொகையை சரியாக வழங்காமல் இருந்து வந்துள்ளனர். மேலும், அசல் தொகையையும் முதலீட்டாளர்களிடம் திருப்பி கொடுக்காமல், கடந்த எட்டு மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், ஒரு ரகசிய தகவலின் பேரில், தானே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், புனேவின் தேஹு சாலையில் இருந்து ஷ்ரத்தாவை கைது செய்தனர். அவரது கணவர் தலைமறைவாக உள்ளார். கைது செய்யப்பட்ட ஷ்ரத்தாவிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்