மராட்டிய அமைச்சரவையில் ஒரு பெண்களுக்கு கூட இடமில்லை; தேசியவாத காங்கிரஸ் விமர்சனம்
மராட்டிய மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர். மந்திரிகளுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், புதிய மந்திரிசபையில் ஒரு பெண்களுக்கு கூட இடமில்லை என்று குறித்து சுப்ரியா சுலே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; மராட்டிய மாநிலம்தான் முதல்முறையாக பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கியது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் இருந்தும் 18 அமைச்சர்களில் ஒரு பெண்கூட இடம்பெறவில்லை. இது பாஜகவின் மனநிலையை காட்டுகிறது என்று விமர்சித்துள்ளார்.