பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி லைவ் வீடியோ வெளியிட்ட பெண்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகி லைவ் வீடியோ வெளியிட்ட பென்ணால் பதவி பறிபோ நது

Update: 2022-07-13 12:55 GMT

மும்பை

மராட்டிய மாநிலத்தில் சோலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக். பா.ஜ.க. மாவட்ட நிர்வாகி. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிர்மலா யாதவ் (32) என்ற இளம் பெண்ணை வேலை வாங்கித் தருவதாக சொல்லி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

அந்த பாஜக நிர்வாகி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் முகநூல் பக்கத்தில் உள்ள லைவ் வீடியோ மூலமாக பேசியிருக்கிறார்.

கட்டிலில் அரைகுறை அடையுடன் ஸ்ரீகாந்த் தேஷ்முக் அமர்ந்திருக்க அந்தப் பெண் அழுது கொண்டு இந்த வீடியோவில் பேசுகிறார். உடனே ஓடி வந்து அந்த செல்போனை தட்டி விட்டு சத்தம் போடுகிறார் ஸ்ரீகாந்த். இந்த வீடியோ வைரலாகி மராட்டிய மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதை அடுத்து ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நிர்மலா யாதவிற்கும் தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. அந்தப் பெண் தன்னை மிரட்டி பணப்பறிக்க முயற்சிக்கிறார் என்று போலீசில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார் இந்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீகாந்த் யாதவ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மராட்டிய மாநில பாஜக துணை தலைவர் சித்ரா வாக், ஸ்ரீகாந்த் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானதும் அவரை பதவியில் இருந்து விலக அறிவுறுத்தியதால் அதன்படியே அவரும் ராஜினாமா செய்து விட்டார். கட்சியிலிருந்து பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண் நேரில் வந்து புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்