லக்னோ பெயர் விரைவில் மாற்றம்: உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி அறிவிப்பு

லக்னோ விரைவில் லட்சுமண் நகரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.

Update: 2023-02-08 10:35 GMT



பதோஹி,


உத்தர பிரதேச துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் இன்று பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளை பற்றி ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அதன்பின் சூரியவா பகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயியின் சிலையை திறந்து வைத்துள்ளார். அப்போது, லக்னோவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற பா.ஜ.க. எம்.பி. சங்கம் லால் குப்தாவின் கோரிக்கை பற்றி குறிப்பிட்டார்.

சங்கம் லால், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவின் பெயர் திரேத யுகத்தில் லக்கன்பூர் மற்றும் லட்சுமண்பூர் என பெயரிடப்பட்டு இருந்தது என நேற்று பேசும்போது குறிப்பிட்டார்.

அதன்பின் நவாப் ஆசாப்-உத்-தவுலா காலத்தில் லக்னோ என பெயர் மாற்றப்பட்டது. அதனால், லக்னோவின் பெயரை மாற்ற வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் நேற்று கடிதம் வழியே வலியுறுத்தினார்.

இதுபற்றி பதக் கூறும்போது, லக்னோ லட்சுமணனின் நகரம் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அதனால், பெயர் மாற்றம் பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறினார்.

அதனால் லக்னோவை, லட்சுமண் நகரி என விரைவில் மாற்றம் செய்வதற்கான சூழல் பற்றி ஆய்வு செய்து, அடுத்த கட்ட தகவலை அரசு அளிக்கும் என கூறியுள்ளார். அதனால் லக்னோவை, லட்சுமண் நகரி என்ற பெயரில் அழைக்கும் தனது நோக்கங்களை அவர் வெளியிட்டு உள்ளது தெரிய வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்