புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்-மந்திரியுமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.;

Update:2024-03-03 11:14 IST

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மக்களவை தொகுதி பா.ஜ.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்-மந்திரியுமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.

வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.க. விரைவில் அறிவிக்கும் என முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்