நாடாளுமன்ற தேர்தல்: இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் 60 டிரோன்களை கைப்பற்றிய பாதுகாப்பு படை

பஞ்சாப் எல்லையோர பகுதிகளில், 2 சீன தயாரிப்பு டிரோன்கள் நேற்று கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் போதைப்பொருட்கள் இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Update: 2024-05-31 14:41 GMT

சண்டிகர்:

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த சந்தேகத்திற்குரிய வகையில் பறக்கும் டிரோன்களை சுட்டு வீழ்த்தினர். சில டிரோன்கள் இந்திய பகுதிக்குள் வந்து வந்த பின் அதிகாரிகள் கைப்பற்றினர்.

மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து சுமார் 60 டிரோன்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றி உள்ளனர் அல்லது சுட்டு வீழ்த்தி உள்ளனர் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து வந்த இந்த டிரோன்களில் அதிக டிரோன்கள் பஞ்சாப் எல்லையில் இருந்து கைப்பற்றப்பட்டன. மேலும் சில டிரோன்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எல்லையோரம் தடுக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் டரன் மாவட்டத்தில் உள்ள எல்லையோர பகுதிகளில் சீனாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு டிரோன்கள் நேற்று கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் போதைப்பொருட்கள் இருந்ததாகவும் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையானது இந்தியாவின் மேற்கு பகுதியில் ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் வழியாக செல்கிறது. இதில் பஞ்சாப் பகுதியில் உள்ள எல்லைப்பகுதி 553 கிலோ மீட்டர் கொண்டது. பஞ்சாப் மாநிலத்தின் 13 மக்களவை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்