பட்ஜெட் கூட்டத்தொடர்: மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.;

Update:2024-02-01 12:59 IST

புதுடெல்லி,

2024-25ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 57 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீது அவர் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, நிதி மசோதா 2024-ஐ மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, நாளை காலை 11 மணிவரை மக்களவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஓம்.பிர்லா தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்