டிசம்பர் மாதத்தில் கடனுக்கான வட்டி உயருகிறது - ரிசர்வ் வங்கி நடவடிக்கை

டிசம்பர் மாதத்தில் கடனுக்கான வட்டி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2022-10-31 21:16 GMT

புதுடெல்லி,

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது.

இந்தநிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம், 3-ந்தேதி நடக்கிறது. அதில், மீண்டும் ரெபோ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான எஸ்.பி.ஐ. ரிசர்ச் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ. ரிசர்ச் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கும். அதில் எந்த முடிவுகளும் அறிவிக்கப்படாது. ஆனால், டிசம்பர் மாத மத்தியில், ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம்வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ரெபோ ரேட் உயர்வால், வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்