கேரளாவில் மது விற்பனை அமோகம் - ஒரே நாளில் ரூ.107.14 கோடிக்கு மது விற்பனை
கேரளாவில் புத்தாண்டையொட்டி, ஒரே நாளில், 107 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் புத்தாண்டையொட்டி, ஒரே நாளில், 107 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கேரள அரசுக்கு சொந்தமாக மாநிலம் முழுவதும் சுமார் 268 பெவ்கோ கடைகள் உள்ளன.
இதில் திருவனந்தபுரத்தில் பவர் ஹவுஸ் சாலையில் அமைந்துள்ள மதுக்கடையில் மட்டும் 1 கோடியே 13 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 95 கோடியே 67 லட்சம் ரூபாயாக இருந்த மது விற்பனை, இந்த ஆண்டு, 107 கோடியே 14 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
டிசம்பர் 22 முதல் 31 வரையிலான பத்து நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 686 கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 649 கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.