சிங்கங்களை பாதுகாத்து பல தலைமுறைகளை உருவாக்குவோம் - பிரதமர் மோடி

சிங்கங்கள் தனக்குப் பசி எடுத்தால் மட்டுமே வேட்டையாடும் சிறப்பு குணம் கொண்டதால் இவை காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

Update: 2023-08-10 06:49 GMT

புதுடெல்லி,

காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சிங்கங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்க ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 10-ம் தேதி உலக சிங்கங்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உலக சிங்கங்கள் தினத்தையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலக சிங்கங்கள் தினம் என்பது கம்பீரமான சிங்கங்களைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும். ஆசிய சிங்கங்களின் வாழ்விடமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை மேலும் பாதுகாத்து பல தலைமுறைகளை உருவாக்குவோம். சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் உழைக்கும் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்